Advertisment

பா.ஜ.கவிலிருந்து விலகிய நேதாஜியின் பேரன்!

Netaji's grandson left the BJP!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரனும் மேற்கு வங்க பாஜகவின் முன்னாள் துணைத் தலைவருமான சந்திர குமார் போஸ், புதன்கிழமை பாஜகவில் இருந்து விலகியுள்ளார். நேதாஜியின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதில் பாஜகவின் மத்திய தலைமை மற்றும் மேற்கு வங்கத் தலைமையிடம் ஆதரவு இல்லாததே காரணம் என்றுள்ளார்.

Advertisment

இது பற்றி சந்திர குமார் போஸ், பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நான் உடனடியாக ராஜினாமா செய்வதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதுகிறேன். போஸ் குடும்பத்திற்கு முக்கியமான நாளன்று இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மூத்த சகோதரரும், எங்களின் வழிகாட்டியும், தோழருமான எனது தாத்தா சரத் சந்திர போஸின் 134வது பிறந்தநாளை தேர்வு செய்தேன். போஸ் சகோதரர்கள், சரத் மற்றும் சுபாஸ் சந்திர போஸ், பிரதானமாக சுதந்திர இந்தியாவின் உள்ளடக்கிய மதச்சார்பற்ற சித்தாந்தத்திற்காக நின்றார்கள்.

Advertisment

நரேந்திர மோடியின் தலைமைத்துவம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நான் 2016 ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தேன். என்னுடைய விவாதங்கள் போஸ் சகோதரர்களின் உள்ளடக்கிய சித்தாந்தத்தை மையமாகக் கொண்டிருந்தன. பாஜக மேடையில் இந்த சித்தாந்தத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என நினைத்திருந்தேன். மதம், ஜாதி, சமய வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரையும் பாரதியராக (இந்தியராக) ஒன்றிணைக்கும் நேதாஜியின் சித்தாந்தத்தைப் பரப்பஒரு நோக்கத்துடன் பாஜகவின் கட்டமைப்பிற்குள் 'ஆசாத் ஹிந்த் மோர்ச்சாவை' உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. நான் இந்த அமைப்பினை, நம் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கவும், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கும் இது அவசியம் எனக் கருதினேன்.

இந்த நோக்கங்களை அடைவதற்கு, நான் மேற்கொண்ட தீவிர முயற்சிகள் மத்தியிலோ அல்லது மேற்கு வங்க பாஜகவிடமிருந்தோ எந்த ஆதரவையும் பெற்றுத் தரவில்லை. வங்காள மக்களைச் சென்றடைய வங்காள வியூகத்தை பரிந்துரைக்கும் விரிவான முன்மொழிவை நான் முன்வைத்தேன். இருந்தும் எனது முன்மொழிவுகள் புறக்கணிக்கப்பட்டன. கடிதத்தின் வாயிலாக, இந்த சூழ்நிலையில், நான் பாஜகவில் உறுப்பினராக முழு மனசாட்சியுடன் நீடிக்க இயலாது. கடந்த காலங்களில் நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கவும், உங்கள் முயற்சிகள் சிறப்பாக அமைய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2016ல் மேற்கு வங்க பாஜக துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் சந்திரகுமார் போஸ். பின்னர் 2020ல் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் போஸ். பாஜக அவரைப் பதவியில் இருந்து நீக்கிய பிறகு, சந்திர குமார் போஸ், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும். தேர்தல்களில் வெற்றி பெறவில்லை என சொல்லப்பட்டது. இது குறித்து அவரே ஒரு பேட்டியில், "நான் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு, பாஜகவின் சிஏஏ மற்றும் என்ஆர்சி கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டது. தொடர்ந்து, 2016, 2019 தேர்தலின் தோல்விகள் என்றும் நினைக்கிறேன். இதனால், கட்சி என்னை வெற்றிபெறும் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் கொல்கத்தா தெற்கு தொகுதியில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe