gjh

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் மின் ஒளி வடிவிலான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். நேதாஜியின் 125 வது பிறந்த நாள் விழா இந்தியா முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக டெல்லியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒருபகுதியாக அவரை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு மின் ஒளி வடிவிலான அவரது சிலையை இன்று திறந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். நேதாஜியின் பிறந்த தினம் அவரது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisment