ADVERTISEMENT

நேபாள நாட்டு விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

04:27 PM May 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

நேபாள நாட்டு அரசின் பொதுத்துறை நிறுவனம் தாரா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று (29/05/2022) காலை 09.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்டு, ஜோம்சோமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள், விமான பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.

ADVERTISEMENT

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியை நேபாள நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் நேபாள நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான விமானம் கடைசியாக, தவுலகிரி மலைப்பகுதியில் காணப்பட்டதாகவும், அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விமானம் விழுந்த இடம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT