Advertisment

பூமியை நெருங்கும் பெரிய வால்நட்சத்திரம்... இன்று முதல் இந்தியாவில் தென்படும்...

neowise comet can be seen in india from today

Advertisment

பூமியை நெருங்கி வரும் அரிய வகையான மிகப்பெரிய நியோவிஸ் வால் நட்சத்திரத்தை இன்று முதல் 20 நாட்களுக்கு இந்தியாவில் காண முடியும் என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்.

நாசாவால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சி / 2020 அல்லது நியோவிஸ் என்ற வால்நட்சத்திரம் ஜூலை 22 ஆம் தேதி பூமியை மிக நெருக்கமாகக்கடந்துசெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வால்நட்சத்திரம் ஜூலை 14 முதல் இந்தியாவில் வடமேற்கு வானத்தில் தெரியும் எனவும், இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள பதானி சமந்தா கோளரங்கத்தின் துணை இயக்குநர் டாக்டர் சுபேந்து பட்நாயக் இதுகுறித்து கூறுகையில், "ஜூலை 14 முதல், சி / 2020 எஃப் 3 வடமேற்கு வானத்தில் தெளிவாகத் தெரியும். அடுத்த 20 நாட்களுக்கு சுமார் 20 நிமிடங்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இது தெரியும். மக்கள் அதை வெறும் கண்ணால் பார்க்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வால்நட்சத்திரம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாசாவின் நியோவிஸ் மிஷனால் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் இது ஜூலை 22 அன்று பூமியிலிருந்து சுமார் 103 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் மிகநெருக்கமாக காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NASA Space comet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe