Skip to main content

நேரு பண்டிட் அல்ல; சர்ச்சையை கிளப்பிய பாஜக எம்.எல்.ஏ

Published on 11/08/2018 | Edited on 11/08/2018

 

bjp mla

 

 

 

மாட்டு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடும் ஒருவர் எப்படி பண்டிட்டாக இருக்க முடியும் எனவே நேரு பண்டிட் அல்ல என பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹூஜா என்பவர்  அடிக்கடி பல்வேறு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தும் ஒருவர். இவர் அண்மையில் காங்கிரஸ் பற்றி பல குற்றச்சாட்டுகளை சர்ச்சையான வார்த்தைகளால் முன்வைத்தவர்.

 

பசு கொலை என்பது  மனித உயிரை பறிக்கும் தீவிரவாதத்திற்கு இணையானது. இரண்டு மூன்று மனிதனை கொல்வதை விட ஒரு பசுவை கொல்வது என்பது இந்துக்களின் மனதை ஒட்டுமொத்தமாக சாகடிக்கும் செயல் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல் இந்திராவுடன் ராகுல் கோவில்களுக்கு சென்று நிறைய போதனைகளை பெற்றார் என்ற கருத்துக்கு ''ராகுல் எப்போது எந்த கோவிலுக்கு சென்றார் அதுவும் இந்திராகாந்தியுடன் ? என  கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பினார்.

 

அதேபோல் அண்மையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி பெரிய சர்ச்சை கருத்தை முன்வைத்தார். பாலியல் கொடுமைகளுக்கும் போதை பழக்கங்களுக்கும் பெயர் போனது  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அந்த பல்கலைகழகத்தில் படிப்பவர்கள் அந்த குற்றச்செயல்களுக்கு பழக்கப்படுத்தப்படுகின்றனர்  என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

 

 

தற்போது நேருவுக்கு முன் பண்டிட் பட்டம் போடுவது சரியல்ல மாட்டு இறைச்சியும், பன்றி இறைச்சியும் சாப்பிடுபவர் பண்டிட்டாக இருக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை கிளம்பியுள்ளார். இந்த கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் கண்டனத்தை பெற்றுவருகிறது. 

சார்ந்த செய்திகள்