Advertisment

வெளியான நீட் தேர்வு முடிவுகள்; தமிழ்நாட்டு மாணவர்கள் அசத்தல்

NEET results released; Tamilnadu students are amazing

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காகநாடு முழுவதும் மொத்தம் 18,72,341 மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சுமார் 1.50 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.

Advertisment

இந்நிலையில் இன்றுநீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பிடித்து அசத்தியுள்ளனர். முதல் இடத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் பிடித்துள்ளார். 3 ஆவது இடத்தை கவுசவ் என்ற மாணவரும், சூர்யா சித்தார்த் என்ற மாணவர் 6 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். வருண் என்ற மாணவர் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisment

முதலிடத்தைப் பிடித்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் 99.99% மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

neet
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe