Advertisment

நீட் முறைகேடு; இருவர் கைது

NEET malpractice; Two arrested in Patna

Advertisment

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

நீட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் 300 கோடி ரூபாயை இலக்காக வைத்து நீட் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தது. நீட் வினாத்தாள்களைத்தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்கள் உதவியுடன் வினாத்தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிபிஐ வெளியிட்டுள்ள தகவலின் படி மனிஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CBI police
இதையும் படியுங்கள்
Subscribe