Skip to main content

நீட் தேர்வை இனி சிபிஎஸ்சி நடத்தாது!!-பிரகாஷ் ஜவடேகர்

Published on 07/07/2018 | Edited on 07/07/2018
javadekar

 

 

 


டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் போட்டித்தேர்வுகளை பற்றி அளித்த பேட்டியில்  தெரிவித்துள்ளாதாவது:

 

நீட்,ஜெஇஇ,மேட், ஜிபேட் ஆகிய போட்டித்தேர்வுகளை இனி தேசிய தேர்வு முகமை நடத்தும்.  

 

ஜெஇஇ தேர்வுகள் ஜனவரி மற்றும் எப்ரல்  மாதங்களில் நடைபெறும்.

 

நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடைபெறும்.

 

நீட் தேர்வு எழுத்து தேர்வாக இல்லாமல் கணினி முறையில் நடத்தப்படும். கணினி முறையில் மட்டும் தானே தவிர ஆன்லைன் முறை அல்ல. மாணவர்களுக்கு கணினி அறிவு திறம்பட இருப்பதால் அதனை கருத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு  இந்த முறை அதை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

 

இரண்டு கட்டமாக தேர்வுகள் நடைபெறுவதால் ஒரே நேரத்தில் மொத்தமாக தேர்வுகள் எழுதப்படுவது தடுக்கப்படும், இரண்டு முறை நடக்கும் தேர்வில் வினாத்தாள்கள் ஒரே மாதிரி கடினமாகத்தான் இருக்கும்.

 

தேர்வுகள் வெளிப்படையாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும். பாடத்திட்டம், தேர்வுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை.

 

நீட், ஜெஇஇ ஆகிய தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடைபெறும். அதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெருகிறார்களோ அதை கருத்தில் கொண்டு கல்லுரி நுழைவுக்கு எற்றுக்கொள்ளப்படும்.

 

மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதமே இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். இத்தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதியாக முடிவுசெய்து வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்