அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இளங்கலை மற்றும் முதுகலைக்கென தனித்தனியாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி https://ncct.nta.nic.in என்ற இணையதளத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குக்கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வானது மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். தமிழ் உட்பட 13 மொழிகளில் நடக்கும் தேர்வுக்குத்தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.