neet exam students exam hall in chennai

Advertisment

நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல் வெப்ப பரிசோதனை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் செய்த பின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வு அறைக்கு உள்ளே சென்றவுடன் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.

காலை 11.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை மாணவர்கள் தேர்வறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று (13/09/2020) பிற்பகல் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் 15,97,433 பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 238 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.