neet exam results data mix match national testing agency

தேசிய தேர்வு முகமை (National Testing Agency) வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சிபெற்றது 88,889 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வெழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37,301 பேர் என தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளி விவரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

தெலுங்கானாவில் 50,392 பேர் தேர்வெழுதிய நிலையில், 1,738 பேர் மட்டும் பாஸ் ஆன நிலையில், தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்வெழுதிய 1.56 லட்சம் பேரில் 7,323 பேர் மட்டும் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79 என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை, மாநில தேர்ச்சி விகிதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பமடைந்துள்ளனர். நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்ணிலும் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.