Advertisment

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

Advertisment

neet exam results announced

தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் தேர்ச்சிபெற்றுள்ளார். இது தேர்வு எழுதியவர்களில் 56.50% பேர் ஆவார்கள். இதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியதில் 48.57% ஆகும்.

Advertisment

மாநிலவரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று வெளியான முடிவுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் தமிழக மாணவர் கர்ணபிரபு 720 க்கு 575 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

பொது தேர்வில்ஸ்ருதி என்ற தமிழக மாணவி இந்திய அளவில் 57வது இடம் பிடித்து தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார்.தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MBBS neet Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe