நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ளது.

NEET EXAM APPLY DATE EXTENDS NATIONAL TESTING AGENCY ANNOUNCED

நீட் நுழைவுத் தேர்வுக்கான (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST- NEET) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த 2- ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (31.12.2019) இரவு (11.59) மணிக்கு நிறைவு பெறவிருந்த நிலையில், ஜனவரி 6- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.nta.ac.in, ntaneet.nic.in அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

DATE EXTEND online apply now
இதையும் படியுங்கள்
Subscribe