Skip to main content

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

Published on 31/12/2019 | Edited on 31/12/2019

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ளது.

NEET EXAM APPLY DATE EXTENDS NATIONAL TESTING AGENCY ANNOUNCED


நீட் நுழைவுத் தேர்வுக்கான (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST- NEET) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த 2- ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று (31.12.2019) இரவு (11.59) மணிக்கு நிறைவு பெறவிருந்த நிலையில், ஜனவரி 6- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு  இணையதள முகவரி: www.nta.ac.in, ntaneet.nic.in அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருப்பினும் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

நீட் தேர்வு; விதிகளில் திருத்தம்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

NEET Exam; Amendment of Rules

 

பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்காத மாணவ மாணவிகளும் இனி மருத்துவர் ஆகலாம் எனத் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

 

பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த தேர்வுக்கு தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய கல்வி முறையில் உயிரியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள்தான் மருத்துவ படிப்பை படிக்க முடியும் என்ற விதி இருந்தது. இந்த நிலையில், இந்த விதியை மாற்றும் விதமாக இனிமேல், உயிரியல் பாடப்பிரிவை எடுக்காத மாணவர்கள் கூட மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வை எழுதலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் / உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் படிக்காமல் வேறு பாடங்களைப் படித்தவர்கள் மேல்நிலைப்பள்ளி கல்வியை முடித்த பின்னர் அவர்கள் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு எழுதும் தகுதி பெற்றவர்கள் ஆவர். அதாவது, உயிரியல் பாடத்தை தேர்வு செய்யாத மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவம் அல்லது பிடிஎஸ் (பல் சார்ந்த படிப்பு) படிப்பில் சேர முடியும். இந்த மாணவர்கள் தங்களது பாடங்களைச் சேர்த்து கூடுதல் பாடமாக உயிரியல் அல்லது உயிர் தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறது. 

 

மேலும், இந்த அறிவிப்பிற்கு முன்னர் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கும் இந்த புதிய விதி செல்லத்தக்கது என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அறிவிப்புகள் அனைத்தும் பள்ளிக் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் அறிவிப்புகளாக இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.