Advertisment

நீட்: மத்திய உள்துறை அமைச்சருடன் இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு!

Need: All party MPs meet with Union Home Minister today!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் இன்று (29/12/2021) அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு சந்திக்கிறது. தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் தமிழ்நாடு அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு சந்திக்கிறது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி.க்களுடன் அ.தி.மு.க. எம்.பி.க்களும் சந்திக்கின்றனர்.

Advertisment

டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் இல்லத்தில் நடைபெற உள்ள சந்திப்பில், நீட் விலக்கு அளிக்கக்கோரிய மனுவை எம்.பி.க்கள் குழு அளிக்க உள்ளதாக தகவல் கூறுகின்றன.

Advertisment

MPs Tamilnadu Delhi AmitShah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe