Advertisment

ஒத்திவைக்கப்படும் நீட் தேர்வு? - விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

neet exam

கரோனா பரவல் காரணமாக முதுநிலை படிப்புகளுக்கானநீட் தேர்வு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நீட் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிடப்படுவதற்கும், நீட் தேர்வுக்கும் இடையே 60 நாட்கள் இடைவெளி இருக்கும்.

Advertisment

தேர்வு நிலையங்கள், தேர்வு அறைகளைஒதுக்குவது போன்ற பணிகளுக்காக இந்த இடைவெளி பயன்படுத்தபடும். ஆனால் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்னும் நீட் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியிடப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

இந்தநிலையில், அண்மையில் மத்திய சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் நீட் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசித்ததாகவும், அந்தக் கூட்டத்தில் கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

union education minister union health ministry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe