தேசிய தேர்வு முகமை அறிவித்த தேதிகளில்நீட், ஜெ.இ.இ தேர்வு நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.அதேபோல்ஜெ.இ.இமெயின் தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமைஅறிவித்துள்ளது. கரோனாவை கருத்தில் கொண்டு ஜெ.இ.இ தேர்வு மையங்கள் 570 லிருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு மையங்கள் 2,546 லிருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைகணிசமாக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு தமிழகத்தில்ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 705 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது.அதே நேரத்தில் பீகாரில் 28%,உத்தரபிரதேசத்தில் 16% எனநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கூடியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.