Skip to main content

அறிவித்த தேதிகளில் நீட், ஜெ.இ.இ தேர்வு... தமிழகத்தில் குறைந்த, விண்ணப்பித்தோர் எண்ணிக்கை!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

 NEED, JEE exam on announced dates ... Low number of applicants in Tamil Nadu!

 

தேசிய தேர்வு முகமை அறிவித்த தேதிகளில்  நீட், ஜெ.இ.இ தேர்வு நடைபெறும் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் ஜெ.இ.இ மெயின் தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கரோனாவை கருத்தில் கொண்டு ஜெ.இ.இ தேர்வு மையங்கள் 570 லிருந்து 660 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மையங்கள் 2,546 லிருந்து 3,843 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த வருடம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 705 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் பீகாரில் 28%, உத்தரபிரதேசத்தில் 16% என நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்