election

பிரபல செய்தித் தொடர்பு நிறுவனமான டைம்ஸ் நௌவ் நடத்தியகருத்துக்கணிப்பு முடிவுகளில்தேசிய அளவில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 252 இடங்களை பிடிக்கும் என்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 147 இடங்களைப்பிடிக்கும்எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அளவில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களையும் அ.தி.மு.க 4 இடங்களையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, கர்னாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் நிலையும் கவனிக்கப்படவேண்டியவை.

Advertisment

அந்த வகையில் 20 நாடாளுமன்ற தொகுதிகளையுடைய கேரள மாநிலத்தில் ஆண்டுவரும் இடதுசாரிகள் ஜனநாயக முன்னனி 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் எனவும் ஐக்கிய ஜனநாயக முன்னனியே 16 இடங்களை பிடிக்கும் எனவும் மற்ற கட்சிகள் 1 இடத்தைப்பிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அது போல 25 தொகுதிகளையுடைய ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் 23 இடங்களையும் தெலுங்கு தேசம் கட்சி 2 இடங்களையும் பிடிக்கலாம் என்பது கருத்துக்கணிப்பு முடிவு.

Advertisment

28 தொகுதிகளையுடைய கர்நாடகாவில் பாஜக 17 இடங்களையும் காங்கிரஸ் 11 இடங்களையும் பிடிக்கலாம் என கணிக்கப்படுகிறது. தெலுங்கானாவில் மோத்தமுள்ள 17 இடங்களில் தெலுங்கானா ராஸ்ட்ர சமிதி (TRS) 10 இடங்களையும் காங்கிரஸ் 5 இடங்களையும் பாஜக 1 இடத்தையும்மீதமுள்ள 1 இடத்தை மற்ற கட்சிகளும் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. புதுச்சேரியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவு சொல்கிறது.