குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில்வேட்பாளராகதிரௌபதிமுர்முபோட்டியிடுகிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாடெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க.வின் நாடாளுமன்றக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள்ராஜ்நாத் சிங், அமித்ஷா,நிதின் கட்கரிஉள்ளிட்டோர்கலந்துக்கொண்டனர்.
யார் இந்த திரௌபதி?- விரிவான தகவல்!
ஒடிஷாமாநிலத்தைச் சேர்ந்தவர் திரௌபதிமுர்மு. இவர்,ஒடிஷாமாநிலத்தைச் சேர்ந்த சந்தால் பழங்குடியின தலைவராக உள்ளார். இந்த மாநிலத்தில்பிஜுஜனதா தளத்துடன் பா.ஜ.க.கூட்டணியில் இருந்தபோது, துணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மேலும்,ஜார்கண்ட்மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவர்.
முதல்முறையாகபழங்குடியினத்தைச்சேர்ந்தவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதிமுர்முவெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.