nda alliance MP meeting in delhi

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

Advertisment

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோடி வந்திருந்த பொழுது எம்பிக்கள் அனைவரும் 'மோடி... மோடி...' என முழுக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தனது வாழ்க்கையை நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளார் மோடி. அனைவருக்கும் அனைத்தும் என்ற நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை மோடி வழங்கி உள்ளார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணி நிபந்தனையில் உருவான கூட்டணி இல்லை அர்ப்பணிப்பில்உருவான கூட்டணி. என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. அறுபது ஆண்டுகள் கழித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுபுதிய சாதனை படைத்துள்ளோம். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்'' என்றார்.

Advertisment

மோடியின் பெயரை உச்சரித்ததும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள்'மோடி... மோடி..' என முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 'பிரதமர் மோடியின் பத்தாண்டுகள் ஆட்சியில் மகத்தான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி' எனப் புகழாரம் சூட்டி பேசினார்.

தமிழகத்தில் இருந்து என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும்கலந்து கொண்டுஎழுந்து நின்றுகைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.