Skip to main content

"பெண் வெளியில் செல்லாமல் இருந்திருந்தால் பாலியல் வன்கொடுமை நடந்திருக்காது" - மகளிர் ஆணைய உறுப்பினர் கருத்து... குவியும் கண்டங்கள்! 

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

chandramuki devi

                                           தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி

உத்தரபிரதேச மாநிலத்தில் பதாயு நகரில் கோவிலுக்குச் சென்ற 50 வயது பெண், பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கோவில் பூசாரி, அவரது சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி, சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரையும் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், "அப்பெண் மாலையில் வெளியே செல்லாமல் இருந்திருந்தால் அல்லது குடும்பத்தின் ஏதாவதொரு  குழந்தையுடன் சென்றிருந்தால் இந்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். ஆனால், அவரை தொலைபேசி மூலம் அழைத்து வெளியே வரச்செய்திருக்கிறார்கள் என்பதால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என தெரிகிறது" என கூறியுள்ளார். 

 

பெண் வெளியில் செல்லாமல் இருந்திருந்தால், வன்கொடுமை நடந்திருக்காது என்ற ரீதியில் தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினரே பேசியிருப்பதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. நாட்டின் பல்வேறு பெண்கள் அமைப்பினர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "இந்த நடத்தை மூலம் பெண்களின் பாதுகாப்பை நம்மால் உறுதிப்படுத்த முடியுமா? பாலியல் பலாத்காரத்திற்கு பாதிக்கப்பட்டவரை மகளிர் ஆணைய உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்" என விமர்சித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக நீடித்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது' - அகிலேஷ் பேச்சு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
'Youngsters will not get married if BJP rule continues' - akilesh yadav speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிய இருக்கிறது. நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இளைஞர்களுக்குத் திருமணம் கூட நடக்காது எனப் பேசி உள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் பத்தாம் தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜகவும் சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த நிலையில், சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவா பகுதியில் நடைபெற்ற ஹோலி விழாவில் கலந்து கொண்ட அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “அரசு வேலையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதால் உத்தரப் பிரதேசத்தில் அரசுத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வயதாகிவிடும். அதனால் அவர்களுக்கு திருமணம் நடக்காத சூழல் கூட ஏற்படும்' எனக் கடுமையாக விமர்சித்தார்.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.