Advertisment

என்.சி.பி கடும் எதிர்ப்பு... ஆர்யன்கான் ஜாமீன் மனு தள்ளுபடி!

NCP strongly opposes ... Aryankan bail plea dismissed!

Advertisment

கடந்தஅக்.02 அன்றுமும்பையில்,கோவா செல்லக்கூடிய சொகுசுக் கப்பல் ஒன்றில்பார்ட்டிநடைபெற்றது.அங்கு தடைசெய்யப்பட்டபோதைப் பொருட்களுடன்பார்ட்டிநடைபெற்றதாகத்தகவல் கசிய,பார்ட்டியில்பங்கேற்றவர்களைக் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில்,அக்.03 அன்று காலை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனானஆர்யன்கானைபோதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதுவரை இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்.7 ஆம்தேதி வரை நீதிமன்றகாவலிலிருந்தஆர்யன்கான்உள்ளிட்டோர் நேற்றுஆஜர்படுத்தப்பட்டனர்.என்.சி.பி காவலைஅக்.11 வரை நீட்டிக்க வேண்டும்எனப் போதைப்பொருள்தடுப்பு துறையினர் நீதிபதியிடம்கோரிக்கைவைத்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் (ஆர்யன்கான்உள்ளிட்ட) 14 நாட்கள் நீதிமன்ற காவலைநீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் ஜாமீன்கோரியஆர்யன்கானின்மனு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க என்.சி.பி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில்வெளிநாட்டைச்சேர்ந்தவர்களுக்கும் சம்பந்தம் உள்ளதுஎனவேஆர்யன்கானுக்குஜாமீன் வழங்கினால் அதுவிசாரணையைபாதிக்க வாய்ப்புள்ளது என்ற கருத்தினைஎன்.சி.பி நீதிமன்றத்தில் வைத்தது. அதனைத் தொடர்ந்துஅவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

police Mumbai sharukh khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe