Advertisment

கடற்படைத் தளத்தில் நடந்த விபத்தில் இரண்டு வீரர்கள் பலி...

sdfg

கொச்சியில் உள்ள சதர்ன் நேவல் கமாண்டின் ஐ.என்.எஸ்.கருடா ஹெலிகாப்டர் நிறுத்துமிடத்தில் உள்ள நகரும் கதவு இன்று காலை திடீரென உடைந்து விழுந்தது, அதில் நவீன், அஜித் சிங் என்ற இரு கடற்படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் உடனடியாக கடற்படை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பலியாகினர். பலியான இருவரும் உயரதிகாரிகள் பிரிவில் பணியாற்றுபவர்கள் என கடற்படை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. பலியான நவீன் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2008 முதல் கடற்படையில் பணியாற்றி வந்தார். ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு வீரரான அஜீத் சிங் 2009 முதல் கடற்படையில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

dead Kerala indian navy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe