Navratri festival Food restriction in Supreme Court canteen?

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா வட மாநிலங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். இத்தகைய சூழலில் தான் உச்சநீதிமன்றத்தில் இயங்கி வரும் உணவகத்திற்கு (கேன்டீன்) வாய்மொழி உத்தரவாக, “இந்த உணவகத்தில் நவராத்திரி விழாவையொட்டி அசைவ உணவு வழங்கப்படமாட்டாது, பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை உணவில் சேர்க்கப்படாது” என்றும் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இணைந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில், “தற்போது விதிக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எதிர்காலத்தில் பல்வேறு தரப்பினரும் இது போன்ற உணவு கட்டுப்பாடுகளைக் கேட்டு வருவார்கள்.

Advertisment

இதனால் உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஆரோக்கியமற்ற சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நவராத்திரி விழா நாட்களில் நவராத்திரி உணவுகளையும் வழங்கலாம். அதோடு மற்ற உணவுகளையும் வழங்கலாம். ஆனால் இது போன்ற உணவுக் கட்டுப்பாடுகளை விதிக்கப்படுவதன் மூலம் நவராத்திரி உணவுகளை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடிய விசயமாக இது பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உணவகத்தில் நவராத்திரியை முன்னிட்டு உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.