Navjot Singh Sidhu will be released today!

Advertisment

பட்டியாலா சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரரும்பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து.

முன்னாள் கிரிக்கெட் வீரரும்பஞ்சாப் காங்கிரஸின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் நவ்ஜோத் சிங் சித்து, குர்ணாம்சிங்கை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். இந்த வழக்கு ஹரியானா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த இந்த வழக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நவ்ஜோத் சிங், பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், இன்று பட்டியாலா சிறையிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விடுதலையாகிறார். மே 16 ஆம் தேதி வரை சிறைத் தண்டனை இருக்கும் நிலையில், நன்னடத்தை காரணமாக 15 நாட்களுக்கு முன்பாக இன்று (ஏப். 1ம் தேதி) விடுதலையாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.