Advertisment

"நவீன் வேண்டாம் சரண் தான் வேண்டும்..! சுவர் ஏறிக் குதித்த இளம்பெண்!"

publive-image

Advertisment

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியைச் சேர்ந்தவர் சோனிகா. இவருக்கும் சரண் என்பவருக்கும் இடையே நீண்ட நாள் காதல். பெண் வீட்டாருக்குக்காதல் விவகாரம் தெரிந்ததால், அவசர அவசரமாக மாப்பிள்ளைபார்த்து, நவீன்குமார் என்பவரோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று (14/11/2021) காலை திருமணம் நடத்தத்திட்டமிடப்பட்டது. முந்தைய நாள் (13/11/2021) சனிக்கிழமை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விடிந்தால் திருமணம் என்றிருந்த நிலையில், சனிக்கிழமை பின்னிரவு சோனிகா, திருமண மண்டபத்தின் சுவர் ஏறிக் குதித்து, சினிமா பாணியில் தப்பிவிட்டார். காலையில் மணப்பெண்ணைக் காணவில்லை என்பதால், திருமணம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மதனப்பள்ளி காவல் நிலையத்தில் பெண் வீட்டார் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மாலையும், கழுத்துமாகக் காதலன் சரணின் கரம் பற்றி காவல் நிலையத்தில் வந்து நின்றார் சோனிகா. இருவரும் மேஜர் என்பதால், இதில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று காவல்துறையினர் கைவிரித்துவிட்டனர்.

காதல் கூடு விட்டுக் கூடு பாயும்.. கோட்டைச் சுவரையும் தாண்டும்..!

police marriage Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe