பாஜகவின் தலைவராக இருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பாஜக-வின் புதிய தலைவராக ஜேபி.நட்டா சில தினங்களுக்கு முன்பு பதவியேற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து காங்கிரஸ் கட்சியையும், அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் ராகுல் காந்தியை சகட்டு மேனிக்கு தாக்கி பேசினார். குடியுரிமை மசோதாவை ஆதரித்து நடந்த அந்த கூட்டத்தில், ராகுல் காந்தி குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதாக கூறுகிறார். குடியுரிமை சட்டத்தை பற்றி அவரால் 10 வரிகள் பேச முடியுமா? என்று சவால் விடுத்தார். இந்த விவகாரம் தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.