புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று ‘முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்தவில்லை’ என சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் நாராயணசாமி, ‘இன்று முதல் இத்திட்டம் மத்திய அரசின் காப்பீடு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்தப்படும்'என அறிவித்தார்.

puducherry

Advertisment

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை அருகே உள்ள இந்திராகாந்தி அரசு தலைமை பொது மருத்துவமனையில் ‘பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா’ எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தினை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

Advertisment

puducherry

இந்த திட்டத்தை தற்போது புதுச்சேரியில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இன்று முதல் நடைமுறைபடுத்தபட்டுள்ள இந்த திட்டம் மாநில அரசின் பாங்களிப்புடன் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்துடன் இணைத்து விரிவுபடுத்தப்படும் எனவும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டையினை முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.