Advertisment

'FASTAG' ஸ்டிக்கர் பெற டிசம்பர் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

'FASTAG'ஸ்டிக்கர் பெற டிசம்பர் 15- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் விரைவாக பயணிக்க 6 வழிச் சாலை, நான்கு வழிச் சாலைகள் போடப்பட்டன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலை தங்க நாற்கர சாலைத் திட்டம் போடப்பட்டது. சாலை கட்டமைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு 50 கி.மீ. தூரமும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனங்கள் சாலை அமைத்து இவற்றை பராமரித்து வருகின்றன. இதற்காக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Advertisment

NATIONAL HIGHWAYS TOLL PLAZAS FASTAG STICKERS DATE EXTEND UNION GOVT

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் 'FASTAG' முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள மையத்தில் 'FASTAG' ஸ்டிக்கர் பெற டிசம்பர் 15- ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு.

NATIONAL HIGHWAYS TOLL PLAZAS FASTAG STICKERS DATE EXTEND UNION GOVT

ஏற்கனவே டிசம்பர் 1- ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்ட நிலையில், டிசம்பர் 15- ஆம் தேதி வரை 'FASTAG' ஸ்டிக்கரை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மேலும்'FASTAG' முறை டிசம்பர் 1- ஆம் தேதிபதிலாக டிசம்பர் 15- ஆம் தேதிக்குஅமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

EXTENDED time FASTAG STICKERS TOLL PLAZAS NATIONAL HIGHWAYS union government
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe