Advertisment

தேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!

இந்திய நாட்டின் 71- வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். இந்த விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

national flag 71th republic celebration in delhi president ram nath kovind

71- வது குடியரசுத் தினவிழாவில் பிரேசில் அதிபர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டார். அதேபோல் ராஜபாதையில் நாட்டின் வல்லமையை பறைசாற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.

national flag 71th republic celebration in delhi president ram nath kovind

Advertisment

இந்த அணி வகுப்பில் டி- 90 ராணுவ டாங்கி, கே- 9 வஜ்ரா பீரங்கி, தனுஷ் பீரங்கி, ருத்ரா மற்றும் துருவ் ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றனர். மேலும் ஆகாஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராணுவ தளவாடங்கள் அணி வகுப்பில் இடம் பெற்றுள்ளன.

national flag 71th republic celebration in delhi president ram nath kovind

அணி வகுப்பு நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். குடியரசு தினத்தையொட்டி டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

PM NARENDRA MODI president ram nath kovind Delhi 71th republic day India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe