Advertisment

அவசர நிலைக்காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியத்தை அறிவித்த மாநில அரசு!

நாட்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த பொழுது கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. சுமார் 19 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்தது. அவசரநிலை அமலில் இருந்த பொழுது ஜனநாயகம் முடக்கி வைக்கப்பட்டது. எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களில் அங்கீகரிக்கப்பட்ட செய்திகளே வெளி வந்தன. ஜனநாயகம் மீண்டும் திரும்ப வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன.

Advertisment

DEVENDRA FADNAVIS

அவசர நிலைக்காலத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இது பற்றி அறிவிப்பை சட்டப்பேரவையில் அறிவித்தார் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். அவசர நிலை குறித்து விரிவாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் பட்னாவிஸ், அவசரநிலை காலத்தில் சிறை கைதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வூதியம் என்பது நிதியை விட அவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை என குறிப்பிட்டார். ஆனால் தங்கள் மீது தவறு இல்லாத பொழுதும் கைது செய்யப்பட்ட சிலர் வேலையை இழந்து ஏழைகளாக உள்ளனர் என கூறினார்.

Advertisment

FEDNAVIS

அதன் பின் பேசிய மாநில அமைச்சர் மதன் ஏராவர் ஓய்வூதியத்திற்காக 3,267 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளன. அவற்றில், அவசரநிலை காலத்தில் சிறையில் இருந்ததற்கான சான்றுகளை நிரூபிக்கும் வகையிலான 1,179 விண்ணப்பங்களுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டன என தெரிவித்தார். இந்த திட்டத்திற்காக ரூபாய் 42 கோடி ஒதுக்கப்பட்டு அவற்றில், ரூபாய் 28 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் பேசிய அமைச்சர் அவசர கால நிலையில் ஒரு மாதக்காலம் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் ரூபாய் 5,000 ஓய்வூதியம் வழங்கப்படும் எனவும், ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருந்தவர்களுக்கு ரூபாய் 10,000 மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவித்தார். அதே போல் இவர்களின் இறப்பு பின் அவர்களின் குடும்பத்திற்கும் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்தியாவிலேயே அவசர நிலை காலத்தில் சிறையில் இருந்த கைதிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் முதல் மாநில அரசு என்ற பெருமையை மஹாராஷ்ட்ரா மாநில அரசு பெற்றுள்ளது.

FOR TODAY MAHARASHTRA GOVERNMENT ANNOUNCED PRISONERS PENSION NATIONAL EMERGENCY IN INDIA India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe