இன்று மருத்துவர்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

narendra modi

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1ஆம் தேதி, சிறந்த மருத்துவரும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமானபிதன் சந்திர ராயின் சாதனைகளைப் போற்றும்விதமாக தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலமற்று சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த மருத்துவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி, இன்று (01.07.2021) மாலை 3 மணிக்கு மருத்துவர்களிடையே உரையாற்றவுள்ளார். இந்திய மருத்துவக் கூட்டமைப்பு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளபிரதமர் மோடி, 'கரோனாவைஎதிர்த்துப் போராடுவதில், அனைத்து மருத்துவர்களின் முயற்சியிலும் இந்தியா பெருமை கொள்கிறது" என கூறியுள்ளார்.

Doctors indian medical association Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe