National Democratic Alliance to meet the President

இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04.06.2024) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகள் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கான சூழல் நிலவுகிறது.

அதே சமயம் ஆந்திரப் பிரதேசத்தில் 16 மக்களவைத் தொகுதிகளை வென்ற தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் 12 மக்களவைத் தொகுதிகளை வென்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும், தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக உள்ளார். அதாவது சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியினர் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.

National Democratic Alliance to meet the President

Advertisment

இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆந்திராவில் முதல்வராக பதவியேற்கவிருக்கும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.கவுடனான கூட்டணியை உறுதி செய்தார். அதே வேளையில் இன்று (05.06.2024) பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும், பா.ஜ.கவிடம் பல நிபந்தனை விதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் விதித்த நிபந்தனைகள் குறித்தத் தகவல் வெளியானது.

அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைநகராக அமராவதியை அறிவிக்க வேண்டும் என்றும், போலாவரம் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவிடம் கோரிக்கை வைக்கப்படவுள்ளதாகத்தகவல் வெளியாகி இருந்தது. அதே போல், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், கோரிக்கை வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

National Democratic Alliance to meet the President

Advertisment

இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்காக டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் 7 எல்.கே.எம். இல்லத்துக்கு நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு வருகை புரிந்தனர். அதாவது இந்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மத்தியில் ஆட்சி அமைக்க யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்துள்ள நிலையில், இக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், மத்தில் ஆட்சி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கு அடுத்தகட்டமாக அமைச்சரவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பிறகு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை இன்று (05.06.2024) சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஆட்சியமைக்க உரிமை கோர வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

National Democratic Alliance to meet the President

முன்னதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார். அதே சமயம் குடியரசுத் தலைவரின் அறிவுரையை ஏற்று புதிய அரசு அமையும் வரை காபந்து பிரதமராக பிரதமர் மோடி நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.