Skip to main content

டெல்லியில் தேசிய பொது பயண அட்டை- இன்று தொடக்கம்!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

National Common Mobility Card pm narendra modi inauguration

டெல்லியில் தேசிய பொது பயண அட்டையின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/12/2020) தொடங்கி வைக்கிறார். 

 

இந்த பயண அட்டையைக் கொண்டு விமான நிலைய மார்க்கத்தில் இயங்கும் மெட்ரோ ரயிலின் எக்ஸ்பிரஸ் சேவையைப் பயன்படுத்தலாம். டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை மூலம் பிற மார்க்க மெட்ரோ ரயிலிலும், பஸ்களிலும் பயணிக்கலாம். மேலும் சுங்கச்சாவடி- வாகன நிறுத்துமிட கட்டணம் மற்றும் சில்லரை வர்த்தக்கத்துக்கும் பொது பயண அட்டையைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (28/12/2020) தொடங்கி வைக்கிறார். மேற்கு ஜனக்புரி- பொட்டானிக்கல் கார்டன் வரை சுமார் 38 கி.மீ. தூரத்துக்கு ஓட்டுநரின்றி மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

சார்ந்த செய்திகள்