மனிதன் இறப்பை விட மாட்டின் இறப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; பாலிவுட் நடிகர் வேதனை

dfsbg

நாட்டின் பல இடங்களில் மனிதனின் இறப்பை விட மாட்டின் இறப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது குறித்து அவர் தற்பொழுது விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'நாட்டின் நிலையை பார்த்து கவலைப்படும் ஒரு குடிமகனாகவே நான் அந்த கருத்தை கூறினேன். இதனை நான் விளம்பரத்திற்காக கூறியதாக சிலர் கூறுகின்றனர். அவர்களது இந்த விமர்சனத்தை நான் பொறுத்துக்கொள்வேன், ஏனென்றால் அது அவர்களது கருத்து சுகந்திரம். அது போல அவர்களும் நான் கூறியதை ஏற்றாக வேண்டும். ஏனெனில் அது எனது கருத்துரிமை. நான் வாழும் நாட்டை பற்றிய கருத்து சொல்ல எனக்கு உரிமை உள்ளது' என கூறியுள்ளார்.

cow slaughter naseerudin shah
இதையும் படியுங்கள்
Subscribe