Advertisment

சாதனை பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கினார் குடியரசுத்தலைவர்!

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

Advertisment

'Nari Shakti Puruskar' AWARDS PRESIDENT IN DELHI

அதன்படி பாகீரதி அம்மா (105), கார்த்தியாயினி (98) உள்ளிட்ட 15 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கினார். 105 வயதான பாகீரதி அம்மா 4- ஆம் வகுப்புக்கு இணையான தேர்வில் சமீபத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார். கேரளாவின் கார்த்தியாயினி அம்மா எழுத்தறிவு தேர்வில் 98% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, கஜேந்திரசிங் செகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

'Nari Shakti Puruskar' awards president ram nath kovind
இதையும் படியுங்கள்
Subscribe