காவல்நிலையம் முன் தனியாளாக பிரதமர் மோடியின் சகோதரர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

narendra modis brother protest in police station

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி நேற்று அஜ்மீரில் இருந்து ஜெய்பூருக்கு சாலை மார்க்கமாக தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பாக்ரூ காவல் நிலையம் வாசலில் தனது வாகனத்தை திடீரென நிறுத்திய அவர், அங்கேயே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் என்ன செய்வதென்று அறியாத அங்கிருந்த காவலர்கள் அவரை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது காவலர்களிடம் பேசுகையில், தன்னுடன் காவலுக்கு வரும் தனிப்பாதுகாவலர்களுக்கு தனியாக வாகனம் வழங்க வேண்டும் எனவும், தன்னுடைய வாகனத்தில் அவர்கள் யாரும் வரக்கூடாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜெயப்பூர் காவல் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா தொலைபேசியில் பிரகலாத் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தார்.

Advertisment

அரசு விதிப்படி பாதுகாவலர்களை அவருடன் மட்டும் தான் அனுப்ப முடியும். தனியாக வேறொரு வாகனத்தில் அனுப்பமுடியாது என தெரிவித்ததாக காவல் ஆணையர் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.