Skip to main content

நிரவ் மோடியின் 13 சொகுசு கார்கள் ஏலம்!

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி "பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம்" இருந்து சுமார் ரூபாய் 13,000 கோடி கடன் பெற்றுக்கொண்டு வங்கியை ஏமாற்றிவிட்டு லண்டன் தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவரின் ரூபாய் 6000 கோடி மதிப்பிழான  சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. முதற்கட்டமாக நிரவ் மோடியிடம் உள்ள 13 சொகுசு கார்களை ஏலத்தில் விட மும்பை சிறப்பு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது. இதனால் நிரவ்மோடி வைத்திருந்த ( Rolls Royce Ghost, Porsche Panamera , Mercedes Benz , Honda Cars , Toyoto Fortuner , Toyoto Innova , Honda Brios and Others ). இந்த கார்களை ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை பரிசோதிக்கப்பட்ட நிலையில் , கார்களை இயக்க அனுமதி அளிக்கவில்லை. 
 

cars



அதனைத் தொடர்ந்து 13 கார்களின் புகைப்படங்கள் மற்றும் காரின் தொடக்க விலைகள் , கார்களின் எண்கள் உள்ளிட்டவை "Metal Scrap Trade Corporation Limited" என்ற நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டது. இந்த நிறுவனம் கார்களை விற்று பெறப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அளிக்கும் , இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறைக்கு அனுப்பவும் , இந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது.  மேலும் மும்பையில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில்  நிரவ்மோடியிடம் இருந்த ஓவியங்கள் வருமான வரித்துறையால் ஏலம் விடப்பட்டுள்ளனர். அதே போல் ரோல் ராய்ஸ் காரின் விலை ரூபாய் 5 கோடி ஆகும். ஆனால் நிரவ்மோடியின் ரோல்ஸ் ராய்ஸ் காரின் தொடக்க விலையாக ரூபாய் 1.3 கோடியை நிர்ணயித்து ஏலம் விடப்பட்டது. 

இத்தகைய ஏலம் விடப்பட்ட தொகையை சமந்தப்பட்ட வங்கிகள் பெற்றுக்கொள்ளும். இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். இந்நிலையில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியிடம் நிரவ்மோடி பெற்ற கடன் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிரவ்மோடி பண மோசடி செய்தது நிரூப்பிக்கப்பட்டதால் சிறைத்தண்டனை அளித்தது. ஆனால் மீண்டும் ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடி மனுவை தாக்கல் செய்தார். ஆனால் இவரின் மனுவை தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம். மேலும் இந்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் நிரவ்மோடியை இந்தியா அழைத்து வர அனுமதி கோரி மனுவை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ், சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஐபிஎல் கான்ட்ராக்ட் விதிகளில் மாற்றம்! கூடுதல் சம்பளம் பெறும் வீரர்கள் யார்?

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
Change in IPL contract rules! Who are the Indian players who will get extra salary?


ஐபிஎல்லில் ஒரு மெகா ஏலத்தில் எடுக்கப்படும் வீரருக்கு மூன்று ஆண்டுகள் கான்ட்ராக்ட் போடப்படும். முதலில் அவர் என்ன தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டாரோ அதே தொகையே மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும். இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தாலும் அவருடைய சம்பளமானது உயராமல், முதல் வருடம் என்ன கொடுக்கப்பட்டதோ, அதே தொகையே கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது பிசிசிஐ அந்த விதிகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

அதன்படி ஏலத்தில் 50 லட்சத்துக்கும் கீழ் எடுக்கப்பட்ட இந்திய அணியில் ஆடாத இளம் வீரர்களுக்கு, தற்போது ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அது என்னவென்றால், இந்திய அணியில் ஆடாத 50 லட்சத்திற்கும் குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீரர், அடுத்த ஐபிஎல்லுக்கான இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஒரு ஒரு ஆட்டத்தில் ஆடினால், அவருடைய சம்பளத்தொகையானது 50 லட்சமாக உயர்த்தப்படும். அதேபோல 5 முதல் 9 ஆட்டங்களில் ஆடி இருந்தால், அவருடைய சம்பளமானது 75 லட்சமாக உயர்த்திக் கொடுக்கப்படும். 10-க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியிருந்தால், அவருடைய சம்பளமானது 1 கோடி ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்படும். இது அவர் விளையாடிய இன்டர்நேஷனல் ஆட்டங்களுக்குப் பிறகு நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும். எடுத்துக்காட்டாக போன வருடம் ஐபிஎல்லில் ஏலத்தில் எடுக்கப்பட்டு அவர் இந்த வருட ஐபிஎல்லுக்கு முன் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தால், அவருக்கு அடுத்த இரு வருடங்களுக்கு இந்த உயர்ந்த சம்பளத்தொகையானது உயர்த்தி வழங்கப்படும்.

Change in IPL contract rules! Who are the two Indian players who will get extra salary?

ஆனால் இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகை அணியின் தொகையில் எடுக்கப்படாது. இந்த உயர்த்தப்பட்ட சம்பளத் தொகையை பிசிசிஐயே இந்த வீரர்களுக்கு வழங்கும். அணி நிர்வாகம் என்ன ஏலத் தொகைக்கு எடுத்ததோ, அந்த ஏலத்தொகையே மூன்று வருடங்களும் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த உயர்ந்த சம்பளம் வாங்கும் இந்திய இளம் வீரர்கள் வேறு அணிக்கு டிரேட் செய்யப்பட்டால், வாங்கிய அணியே மொத்த சம்பளத்தையும் கொடுக்க வேண்டும். முதன் முதலில் ஏலம் எடுத்த அணிக்கு மட்டுமே அவர்கள் ஏலம் எடுத்த தொகையை மட்டும் கொடுக்கும் சலுகை வழங்கப்படும். அந்த வீரரை மற்ற அணி வாங்கினால், இந்த இன்டர்நேஷனல் ஆட்டங்களில் மூலம் அவருக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தொகையையும் சேர்த்து அந்த புதிய அணியே வழங்க வேண்டும்.

இந்நிலையில், இந்திய அணியில் தற்போது இரண்டு இந்திய வீரர்கள் முதன்முதலாக இந்த சம்பள உயர்வை பெறுகின்றனர். இந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்ட பிறகு சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்ததால், அவருக்கு இந்த வருடம் 50 லட்சமாக சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும். அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையான 20 லட்சத்திலிருந்து மேற்கொண்டு 30 லட்சத்தை பிசிசிஐ அவருக்கு வழங்கும். அதே போல மற்றொரு இந்திய தொடக்க ஆட்டக்காரரான ராஜத் பட்டிதாரும் இந்த சம்பள உயர்வை பெறுகிறார். பெங்களூர் அணிக்கு ஐபிஎல்லில் விளையாடி வரும் அவருக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்து நேற்றைய போட்டியில் ஆடியதால், அவரும் 50 லட்சம் சம்பளத்தை இந்த வருடத்தில் இருந்து பெறப் போகிறார்.

சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்ததற்கும் சம்பள உயர்வு வழங்கப்படுவது வீரர்கள் மத்தியில் புது உத்வேகத்தை கொடுக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- வெ.அருண்குமார் 

Next Story

ஒரு பந்து வீச இத்தனை லட்சங்களா? ஐபிஎல்லை அதிர வைத்த ஆஸ்திரேலிய வீரர்!

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
n

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல்-ன் மினி ஏலமானது கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. மினி ஏலம் என்பதால் பெரிய அளவில் விறுவிறுப்பு இருக்காது என்று கணிக்கப்பட்டது. ஆனால் கணிப்புக்கு மாறாக மிக ஏலத்தையும் விட சிறப்பானதொரு ஏலமாக அமைந்தது.

ஒவ்வொரு அணியும் தனக்குத் தேவையான குறிப்பிட்ட வீரர்களை கணித்து அந்த வீரர்களை வாங்கியே ஆக வேண்டும் என்று முன் தயாரிப்புடன் இந்த ஏலத்தில் களம் இறங்கினர். அதற்கு ஏற்றார்போல் சில அணிகளுக்கு அவர்கள் தேடிய வீரர்கள் கிடைத்தனர். சில அணிகள் தங்களின் தவறான கணக்கால் உரிய வீரர்கள் கிடைக்கும் வாய்ப்பையும் இழந்தனர்.

இதில் முக்கியமாக சென்னை அணி உலக கோப்பையில் இந்திய ஸ்பின்னர்களிடம் கலக்கிய மிட்செலை குறி வைக்கும் என்று கணிக்கப்பட்டது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் மிட்செலை வாங்கலாம் என்கின்ற நிலையில், கடைசி நேரத்தில் சிஎஸ்கே ஏலத்தில் குதித்து மிட்செலை 14 கோடிக்கு வாங்கியது. மினி ஏலத்தில் 14 கோடியா என்று அனைவரும் வியப்படைந்த நிலையில், உலகக் கோப்பையை வென்ற வெற்றிகரமான கேப்டனான கம்மின்ஸ் அதைவிட அதிக விலைக்கு ஏலம் போனார். கம்மின்ஸ் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

மினி ஏலத்தில் 20 கோடியையே தொட்டுவிட்டதா என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வியப்படைந்த வேளையிலும் கம்மின்ஸிக்கு 20 கோடி என்பது மிக அதிகம் என்கிற விமர்சனமும் எழுந்தது. 20 கோடியே அதிகம் என்று விமர்சகர்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிவிட்டு வந்த நிலையில், அதைவிட வியப்பில் மற்றும் அதிர்ச்சியில் நம்மை ஆழ்த்தினார் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க்.

ஸ்டார்க்கும் 20 கோடிகளுக்கு மேல் ஏலம் கேட்கப்பட்டார். குஜராத் அணியும் கொல்கத்தா அணியும் ஸ்டார்க்கை வாங்குவதில் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டினர். 21 கோடியில் முடிந்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில் அதையும் தாண்டி 22, 23 என்று சென்ற அவர் 25 கோடியையும் தொட்டு விடுவாரோ என்று எதிர்பார்த்த நிலையில் 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி அவரை தன் வசப்படுத்தியது. இருப்பினும் ஸ்டார்க் ஒரு பவுலர், ஆல்ரவுண்டர் கூட கிடையாது. அவருக்கு இவ்வளவு கோடிகள் தேவையா? மேலும் அவர் எளிதில் காயம் அடையக்கூடிய வீரர் என்றும், தேசத்திற்கான போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஐபிஎல் இல் இருந்து பாதியிலேயே கிளம்பி விடுவார் என்றும் அவர் மீதான விமர்சனங்கள் வைக்கப்படுவது உண்டு. அப்படி இருக்கையில் அவருக்கு இவ்வளவு கோடிகள் கொடுத்து வாங்குவது தேவையில்லாதது என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தனர்

இந்நிலையில், ஸ்டார்க் இந்த ஐபிஎல் இன் 14 போட்டிகளில் பங்கு பெற்றால் மொத்தமாக அவர் 336 பந்துகள் வீச வாய்ப்பு உள்ளது. இது லீக் போட்டிகளை கொண்டு மட்டும் கணக்கிடப்பட்டுள்ளது. லீக் போட்டிகளில் 14 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்திற்கு நான்கு ஓவர்கள் வீதம் 14 போட்டிகளிலும் மொத்தம் 336 பந்துகள் வீச வாய்ப்பு உள்ளது. அப்படி அவர் வீசும் போது அவர் ஏலத்தில் எடுக்கப்பட்ட தொகையான 24.75 கோடியை கணக்கீடு செய்தால், ஒரு பந்திற்கு 7.36 லட்சம் பெறுகிறார். ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் ஒரு பங்கிற்கு 7.5 லட்சத்திற்கும் மேல் அவர் சம்பளம் பெறுகிறார். இதை கணக்கீடு செய்து சமூக வலைத்தளங்களில் மிகவும் மதிப்பிற்குரிய வீரர் ஸ்டார்க் என்றும் உலக கோப்பையை வென்றதால்தான் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க்கிற்கு இவ்வளவு மதிப்பு என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- வெ.அருண்குமார்