Advertisment

இது காங்கிரஸ் கட்சி போடும் கபடநாடகம்- மோடி தாக்கு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

narendra modi speech in arunachal pradesh

அப்போது பொது மக்களிடையே பேசிய அவர், "காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாஜக அப்படியில்லை. அருணாச்சல பிரதேச மக்களின் ஆதரவுடன், சாலைகள், தேசிய நெடுஞ்சாலை, இரயில் பாதை ஆகியவற்றை உருவாக்க முடிந்திருக்கிறது, மேலும் மற்ற மாநிலங்களுடன் விமான இணைப்பையும் மேம்படுத்தியுள்ளோம்.

காங்கிரஸ் கட்சி கடந்த 2004-ம் ஆண்டு தேர்தலின் போது 2009 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீட்டிற்கும் மின்வசதி கிடைக்க உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டுவரை வெறும் 18 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு என்பது சாத்தியமானது.

Advertisment

அதுபோல காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தேர்தல் அறிக்கையும் முழுவதும் பொய்கள் தான், இது தேர்தல் அறிக்கை அல்ல மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சி போடும் கபட நாடகம்" என கூறியுள்ளார்.

modi loksabha election2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe