அயோத்தி தீர்ப்பு... மக்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுகோள்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்று இன்று காலை 10:30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் ஐவர் குழுவால் வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதுமே பரபரப்பான நிலையில் உள்ளது.

narendra modi

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி இதுகுறித்து ட்விட்டரில் மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், “அயோத்தி வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பை யாருக்குமான வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது. இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரியங்களான அமைதி, ஒற்றுமையை மேலும் பலப்படுத்தும் வகையில் மக்கள் நடந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து மக்கள் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Ayodhya Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe