போப் ஆண்டவருடன் பலதரப்பட்ட விவகாரங்களை விவாதித்த பிரதமர் மோடி!

NARENDRA MODI - POPE FRANCIS

அக்டோபர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறும் 16வது ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடிஇத்தாலி நாட்டிற்குச் சென்றுள்ளார். அவரோடுமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரும்சென்றுள்ளனர்.

இந்தநிலையில், இத்தாலி பிரதமரின்அழைப்பை ஏற்று வாடிகன் நகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று (30.10.2021) போப் ஆண்டவரைச் சந்தித்துஉரையாடினார். போப் ஆண்டவரைச் சந்திக்கும் ஐந்தாவது இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

போப் ஆண்டவரைச் சந்தித்த பிரதமர் மோடி, "போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பை மேற்கொண்டேன். அவருடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது" என தெரிவித்துள்ளார். மேலும், போப் பிரான்சிஸைஇந்தியா வருமாறு அழைத்ததாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

italy Narendra Modi pope francis VATICAN CITY
இதையும் படியுங்கள்
Subscribe