உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 70,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைதங்களது நாட்டில் பரவாமல் தடுக்க, உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இதன் ஒரு கட்டமாக இந்தியாவில் மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் பேசியிருந்தார். அதன்படி 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொது முடக்கத்தை நீட்டிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த முடக்கம் எதுவரை தொடரும் என்றுமே 18 தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஊரடங்கு இதுவரை செயல்பாட்டில் இருந்து வந்த ஊரடங்கை விட மாறுதலாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.