Skip to main content

மக்களுக்காக பிராத்தனை - 18 மணி நேர தியானத்துக்குப் பின் மோடி பேட்டி

Published on 19/05/2019 | Edited on 19/05/2019

 

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் பனிக்குகையில் சாமி தரினம் செய்தார். கேதார்நாத் குகையில் தியானம் மற்றும் வழிபாடு செய்தார். விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டிருந்த மோடி, 18 மணி நேர தியானத்துக்குப் பின்னர் குகையை விட்டு வெளியே வந்தார். காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார். 

 

narandra modi



அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கேதார்நாத் கோயிலில் வழிபட்டதை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். எனக்கும் கேதார்நாத்துக்கும் இடையே உணர்வுப் பூர்வமான சிறப்பு தொடர்பு உண்டு. கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக முழுநேரமும் பணியாற்றி வருகிறேன். இந்தியாவுக்காகவும், இந்திய மக்களுக்காகவும் தான் கேதார்நாத்தில் பிராத்தனை செய்தேன். நான் கடவுளிடம் எனக்காக என்று எதுவுமே கேட்கவில்லை என்றார்.
 

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 முறை பிரதமர் கேதார்நாத் கோயிலுக்கு வந்து சாமி தரசனம் செய்துள்ளார். 


 

 

மக்களவை தேர்தலில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று (19.05.2019) நடக்கிறது. இதற்கான பிரசாரமும் முடிவடைந்துவிட்டது. இதனால் கடந்த ஒன்றரை மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. இந்தநிலையில்தான் பிரதமர் மோடி சனிக்கிழமை கேதார்நாத் சிவன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர் விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

hjk

 

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் அருகே நிகழ்ந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

வட இந்தியாவில் புகழ்பெற்ற இந்து மத கோயில்கள் ஏராளம் உள்ளது. குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் செல்ல தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் காலநிலை , கடுமையான மழைப்பொழிவு மற்றும் நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஆண்டில் பெரும்பாலான நாட்கள் அங்கு செல்வதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் இன்று கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல உத்தரகாண்டின் பாதா பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

 

ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் மோதி கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரத்தை காவல்துறையினர் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 


 

Next Story

சர்ச்சையான முன்னுரை; மோடி நூல் வெளியீட்டில் பங்கேற்காத இளையராஜா

Published on 16/09/2022 | Edited on 16/09/2022

 

Ilayaraja not participate modi and ambedkar book launch

 

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேசன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகத்திற்கு  இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதிய முன்னுரை தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் இருவேறு கருத்துக்களை மாறி மாறி தெரிவித்தனர். இதன்பிறகு  இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இந்நிலையில் மோடியும் அம்பேத்கரும் என்ற புத்தகம் இன்று டெல்லியில் வெளியிடப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற  விழாவில் புத்தகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன், குஷ்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை. இது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.