மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்றுகட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில்,அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் பிரதமர் மோடி அவர் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனு தாக்கலின்போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். காலை காலபைரவர் கோவிலுக்கு சென்று பூஜை செய்த பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.