ஜம்மு-காஷ்மீர், புல்வாமாவில் நடந்த பயங்கரவாததாக்குதலில் கிட்டதட்ட 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்துட்விட்டரில் பிரதமர் நரேந்திரமோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்களில் அவர் கூறியுள்ளதாவது,

Advertisment

சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். புல்வாமாவில் நடந்தஇந்த தாக்குதல் வெறுக்கத்தக்கது. சிஆர்பிஎஃப் வீரர்களின் உயிர் தியாகம் வீணாகாது. உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஒட்டுமொத்த நாடும் தோளோடு தோள் கொடுக்கும். பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடையவேண்டும்.