வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடி...

பிரதமர் மோடி இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

narendra modi birthday celebrations

1950 ஆம் ஆண்டு பிறந்த பிரதமர் மோடி இன்று தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்கள், அரசியல்வாதிகள், உலக தலைவர்கள் என பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தில் உள்ள சூழலியல் பூங்காவில் பிரதமர் மோடி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். நர்மதா அருகே உள்ள இந்த சூழலியல் பூங்காவில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டு பிரதமர் மோடி பிறந்த நாள் கொண்டாடினார். பின்னர் அந்த பூங்காவையும் பார்வையிட்டார். நாடு முழுவதிலுமிருந்து பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இந்தியா கேட் முன்பு பிரமாண்ட லட்டு வைத்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Modi Abudabhi Hindu temple Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe