இடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அந்த தீவிரவாதி என்றும் பேசினார். அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

narendra modi about pragya thakur statement over godse

இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக வின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்" என கூறினார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜக பிரக்யாவிற்கு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து அவர் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் பிரக்யாவின் இந்த பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிரித்தனர் மோடி அளித்த பேட்டியில் கூறுகையில் ‘‘மகாத்மா காந்தியை பிரக்யா சிங் தாகுர் அவமதித்து விட்டார். பண்பட்ட சமூகத்தில் இது போன்ற பேச்சுக்கு இடமில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் அவரை மன்னிக்க நான் தயாராக இல்லை’’ எனக் கூறியுள்ளார்.