Advertisment

"NaMo" பெயரில் உணவுகள் காவல்துறைக்கு விநியோகம் ! எதிர் கட்சியினர் அதிர்ச்சி !

இந்தியாவில் முதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று காலை தொடங்கி வாக்கு பதிவுகள் அமைதியான முறையில் நடைப்பெற்று வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் நொய்டா மாவட்டத்தில் உள்ள "கௌதம் புத்தா நகர் " மக்களவை தொகுதியில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தனர். அப்போது அந்த உணவு பொருட்களின் முன் பகுதியில் "NaMo" என்ற பெயர் குறிப்பிட்டு இருந்தது.

Advertisment

politics

இதை கண்ட அரசியல் கட்சியினர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த எஸ்.எஸ்.பி "வைபவ் கிருஷ்ணா" என்ற அதிகாரி விசாரணை நடத்தினார். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தக் காவல்துறை அதிகாரி "NaMo" என்பது ஒரு உணவகத்தின் பெயர் ஆகும். எனவே இங்கு காவல்துறைக்கு விநியோகித்த உணவிற்கும் பாஜகவிற்கும் எந்த வித சமந்தமும் இல்லை என தெளிவுப்படுத்தினார். மேலும அவர் கூறுகையில் பாஜகவினர் காவல்துறைக்கு உணவு விநியோகம் செய்ததாக தவறான தகவல்களை சிலர் பரப்பியுள்ளனர். இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் தேர்தல் விதிமுறை படி வாக்கு சாவடி மையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரம் வரை அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் சமந்தமான எந்த ஒரு பொருட்களும் உள்ளே நுழைய தடை என்ற விதிமுறை அமலில் உள்ளதாக தெரிவித்தார். இதனால் எதிர்கட்சியினர் சற்று நிம்மதி அடைந்தனர். இந்த விவகாரத்தால் அந்த வாக்கு சாவடி மையத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பி.சந்தோஷ் , சேலம் .

politics distribution police food namo modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe