Advertisment

டெல்லியில் நமச்சிவாயம்... பாஜகவில் இணைய திட்டம்?

Advertisment

 Namachchivayam in Delhi ... Join in BJP?

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில அமைச்சருமான நமச்சிவாயம் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வந்தநிலையில், நமச்சிவாயம் (வில்லியனூர் தொகுதி), தீப்பாய்ந்தான் (ஊசுடு தொகுதி) ஆகிய இருவரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கான கடிதத்தை அம்மாநில சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் கடந்த25-ஆம் தேதிவழங்கினர்.

புதுச்சேரியில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது, அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தநிலையில், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் தற்போது அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் உள்ளார். காங்கிரஸிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

knamachivayam Delhi Puducherry congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe